அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்! திருவாடானை தல வரலாறு!

Photo of author

By Sakthi

ஆதியாகிய சூரியன் நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால் ஆதிரத்தினேஸ்வரர் என்று பெயர் வந்தது. இந்த தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

மூலவர்-ஆதிரத்தினேஸ்வரர்

அம்மன்- சினேகவல்லி

தல விருட்சம்-வில்வம்

தீர்த்தம் –சூரிய புஷ்கரணி, ஷீரகுண்டம்,வருணத் தீர்த்தம்,அகத்திய தீர்த்தம்,சூரியத்தீர்த்தம், சூரியத்தீர்த்தம், மார்கண்டேயத்தீர்த்தம்

பழமை – 1000 வருடங்களுக்கு முன்

வருணனுடைய மகன் வாருணி ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார், அப்போது வாருணியுடன் வந்த அவன் நண்பர்கள் ஆசிரமத்திலுள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர்.

துர்வாச முனிவர் கோபத்துடன் வாருணி நீ வருணனின் மகனாக இருந்தாலும் பொருந்தாத காரியம் செய்து விட்டாய். ஆகவே பொருந்தாத தோற்றமான ஆட்டின் தலையில் யானையின் உடலுமாக மாறுவாய் என சபித்துவிட்டார்.

தன்னுடைய தவறை உணர்ந்து அவனின் நிலையை கண்ட மற்ற முனிவர்கள் சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அந்த தலத்திற்கு சென்று இறைவனை வழிபடு. அப்படி வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அவனிடம் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் வாருணியும் இந்த தளத்தில் தன்னுடைய பெயரால் குளம் ஒன்றை அமைத்து நாள்தோறும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கி வந்தார்.

இறைவனும் இவருடைய சாபத்தை நீக்கி என்ன வரம் வேண்டும் என கேட்டார், கலிகாலம் முடியும் வரையில் இந்த தளம் என்னுடைய பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெற்றார் வாருணி.

இறைவனும் அதற்கு சம்மதம் தெரிவித்து இந்த தளத்தை அஜகஜ சேத்திரம் என வழங்க அருள்பாலித்தார். இதுவே காலப்போக்கில் திரு என்னும் அடைமொழியுடன் திருவாடானை என்று பெயர் பெற்றது.

ஒவ்வொரு தளத்திலும் ஏதாவது ஒன்று சிறப்புடையதாக இருக்கும், ஆனால் இந்த தலத்தில் மூன்றுமே சிறப்புடையது தான், மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.