வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது, அந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயனாளர்களை கவரும் விதத்தில் இருக்கிறது.
உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு உதவும் முதல்நிலை செயலியாக வாட்ஸ் அப் இருக்கிறது.
குறுஞ்செய்திகள் மட்டுமின்றி காணொளி மற்றும் வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த செயலியில் இருக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், அந்த வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த விதத்தில் வாட்ஸ் அப்பில் மிக விரைவில் புதிய அப்டேட் ஒன்று வரவிருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் கூறியிருக்கிறது.
அதாவது நாம் தவறுதலாக டெலிட் செய்த குறுஞ்செய்தியை மறுபடியும் எடுப்பதற்கு வசதி அண்டூ என்ற ஆப்ஷனுடன் இணைக்கப்படவுள்ளது. இதற்கு இதற்கு முன்பாக எனக்கு மட்டும் டெலிட் செய்யவும், எல்லோருக்கும் டெலிட் செய்யவும், என்ற தேர்வுகள் இருந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், தற்போது டெலிட் செய்யப்பட்ட மெசேஜை மறுபடியும் பார்க்க கொண்டுவருவதற்கான அண்டூ ஆப்ஷன் பயனாளர்களுக்காக உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் வாட்ஸ் அப் தளத்தில் பிரத்தியேகமாக எடிட்டர் எதுவுமில்லாத நிலையில் எடிட் ஆப்ஷனை அறிமுகம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.