சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் அரசுடமையாக்கப்படுகிறதா?

0
173

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சோழர்களின் குலதெய்வம் என்று பலருக்கும் தெரியும்.
வட தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சிவன் ஆலயங்கள் தற்போது இருக்கிறது, ஆனால் இந்த சிவன் ஆலயங்களுக்கு அடித்தளமிட்டவர்கள் சோழர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழகத்தில் இருக்கும் அநேக சிவன் ஆலயங்களை கட்டமைத்தவர்கள் சோழர்கள் தான். அப்படி சோழர்களால் கட்டப்பட்ட பல சிவ ஆலயங்களை தான் தற்போது வரையில் நாம் வணங்கி வருகிறோம்.

அப்படிப்பட்ட சோழர்களின் குல தெய்வமாக விளங்கிய கோவில் தான் இந்த சிதம்பரம் நடராஜர் கோவில்.

இந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தற்போது வரையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரவில்லை. மாறாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருக்கிறது. அந்த தீட்சிதர்கள் தான் அந்த கோவிலுக்கான பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுப்பது கண்டனத்திற்குரியது எனவும், கோவிலை பாதுகாப்பதற்கு அரசின் தலையீடு அவசியம் என்றும், சிபிஎம் கட்சி வலியுறுத்தியிருக்கிறது .

தாம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் ஆட்சேபணை தெரிவித்து வருகிறார்கள், ஆனாலும் ஆய்வு செய்தே தீருவோம் என்று அதிகாரிகளும் கோவிலுக்கு செல்ல காத்து கிடக்கிறார்கள், இந்த விவகாரம் குறித்து தீட்சிதர்களுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அறநிலையத் துறை உயர் அதிகாரிகளை தீட்சிதர்கள் தடுத்து வெளியே நிறுத்தி இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் நேற்று முன்தினம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் கோவிலுக்கு சென்றபோது வழங்கிய ஊடகப் பேட்டியில் அனைத்தும் சுமுகமாக நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் இதற்கு நேர்மாறாக தீட்சிதர்களின் இன்றைய நடவடிக்கை அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பாரம்பரியமான கலை பொக்கிஷங்களும், மிக நீண்ட வரலாறும், இருக்கின்ற தில்லை நடராஜர் கோவில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல பொது மக்களின் சொத்தாகும். ஆகவே அங்கேயே நிர்வாகம் ஒழுங்காக நடக்கிறதா? என ஆய்வு செய்வதற்கான உரிமை அரசுக்கு இருக்கிறது.

கோவில் பராமரிப்பும், கணக்கு வழக்குகளும், ஒழுங்காகதான் நடக்கிறது என்று சொன்னால் ஆய்வு செய்ய விடாமல் தடுப்பது எதற்காக என்ற நியாயமான கேள்வி எழுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீட்சிதர்களின் இந்த மோசமான அணுகுமுறை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும் என்றும், இந்த போக்கினை அனுமதித்தால் கோவிலுக்கும் கோவில் பாரம்பரிய சொத்துகளுக்கும், எது நடந்தாலும் அரசு தலையிட முடியாது என்ற ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே தமிழக அரசு தன்னுடைய கடமையிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.

அதோடு உத்திரப்பிரதேசத்திலுள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொண்ட வழி முறைகளைப் பின்பற்றி ஒரு தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous articleவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் வருகிறது புதிய அப்டேட்!
Next articleபரபரப்பு! அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அதிரடியாக பறந்த உத்தரவு!