காரைக்கால் அருகே திருநள்ளாறு உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும், வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக நடைபெறுவது தான்.
இப்படி உலகப் புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 26ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் உலகம் சகோபுர திருவிழா கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது.
இதன் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் மிகவும் பிரபலமாக நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, திருநள்ளாறு சட்டசபை உறுப்பினர் சிவா, அதோடு துணை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதர்ஷ் மற்றும் பலர் பங்கேற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்து தேரோட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த தேரோட்ட நிகழ்வில் கோவில் நிர்வாக அதிகாரி, அதோடு அறங்காவலர், வாரிய உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் அதோடு பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டு விழாவை சிறப்பித்தனர்.