விருத்தகிரீஸ்வரர் கோவிலின் தினசரி வழிபாட்டு முறைகள்!

0
139

விருத்தகிரீஸ்வரர் ஆலயம் சிவாயநம என்ற ஐந்து எழுத்து உணர்த்தும் விதத்தில் அனைத்தும் ஐந்தாக அமையப் பெற்றதாகும் இதேபோல தினசரி நடக்கும் வழிபாடும் கூட 5 வகையான வழிபாடாக இருந்து வருகிறது. அது தொடர்பாக தற்போது காணலாம்.

1.திரு அசத்தல்: பள்ளியறையிலிருந்து எம்பெருமானை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்வது இந்த சமயத்தில் அவரை சென்று வழிபட்டால் அனைத்து விதமான பலனும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகமாக இருக்கிறது.

2. காலை சாந்தி: இந்த வழிபாடு காலை 8 மணியளவில் நடைபெறும் இந்த வழிபாட்டில் சமயத்தில் சிவபெருமானை வழிபட்டால் பிணிகள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள்.

3. உச்சி காலம்: இந்த வழிபாடு நன்பகல் நேரத்தில் நடைபெறும் அப்போது சிவபெருமானை வழிபட்டால் அனைத்து வகையான செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.

4. சாயரட்சை: மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்து 6 மணி வரையில் நடைபெறும் இந்த பூஜையில் வழிபாடு செய்தால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கும் என சொல்லப்படுகிறது.

5. அர்த்தசாமம்: இரவு 8.30 மணியளவில் நடைபெறும் வழிபாடுதான் இந்த அர்த்தசாம வழிபாடு, இந்த அர்த்தசாம வழிபாட்டில் தொடர்ந்து பங்கேற்று கொள்பவர்களுக்கு வீடு பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது என்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையிடையே இருக்கும் அதீத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

விழாக்காலங்களிலும், சிறப்பு வழிபாட்டு நேரங்களிலும், எந்தவிதமான குறுக்கீடுமில்லாமல் இந்த வழிபாடு நடைபெற்று வருகிறது எனவும் சொல்லப்படுகிறது.

Previous articleஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடக்காமல் போகலாம்!
Next articleசென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக அந்த அரிய வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!