இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து புதுப்புது அப்டேட் குறித்த பல தகவல்களை அறிவித்து வருகிறது வாட்சாப் ஒவ்வொரு ஆண்டும் சோதனை முறையில் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு அதன்பிறகு எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், பல மாத சோதனைகளுக்குப் பின்னர் வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 ஜிபி வரையிலான புகைப்படம் காணொளி உள்ளிட்டவற்றை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
வாய்ஸ் காலில் ஒரே சமயத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் 512 பேர் இணைய முடியும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
வாட்ஸ் அப் பயன்பாட்டில் 100 எம்பி வரையிலான கோப்புகள் மட்டுமே பகிர முடியும் என்று இதுவரையில் இருந்த நிலையில், வாட்ஸ்அப் அதனை 2 ஜிபியாக தற்போது அதிகரித்திருக்கிறது.
. இதன் மூலமாக பயனர்கள் 2 ஜிபி வரையிலான கோப்புகளை வாட்ஸ்அப்பில் இனி வரும் காலங்களில் பகிர முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் வழங்கும் இந்த அப்டேட் உங்களுக்கு கிடைக்கிறதா? என்பதை சோதிப்பதற்கு வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து திரையின் மேல் வலது புறத்தில் இருக்கும் 3 புள்ளிகளை அழுத்த வேண்டும்.
அதன் பிறகு அதில் நியூ குரூப் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து விட்டு அதில் காட்டப்படும் ஏதாவது ஒரு தொலைபேசி எண்ணை தேர்வு செய்தால் மேலே எத்தனை பங்கேற்பாளர்கள் வரை இணைக்கலாம் என்ற எண்ணிக்கை காட்டப்படும். இதன் மூலமாக இந்த புதிய அப்டேட் கிடைக்கிறதா என்பதை அவரவரும் சரிபார்த்துக் கொள்ளலாம்.