உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சார்ந்த பகவான் ஸ்வரூப் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர் அவரை வழிமறித்து ஆவணங்களை பரிசோதனை செய்தனர் என்று சொல்லப்படுகிறது.
அப்போது அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லை இதன் காரணமாக, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அவர் அருகில்தான் வீடு உள்ளது ஆவணங்களை எடுத்து வந்து காட்டுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனாலும் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்தவர்கள் அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிவித்து அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதன்காரணமாக, ஆத்திரமுற்ற அந்த நபர் காவல்துறையினரை பழிவாங்குவதற்காக காவல் நிலையத்திற்கான மின் இணைப்பைத் துண்டித்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் கேள்வி எழுப்பியபோது மின்வினியோகம் மீட்டர் இல்லை என்றும் சட்ட விரோதமாக மின் இணைப்பு இருப்பதால் இணைப்பை துண்டித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.