வாழ்வா சாவா இந்திய அணியின் முயற்சி வெற்றி பெறுமா? இன்று சந்திக்கிறது தென்னாப்பிரிக்க அணியை!

0
106

வர்மா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெல்லியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. அதேபோல கட்டாக்கில் நடைபெற்ற 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த போட்டியானது இந்தியாவிற்கு வாழ்வா சாவா என்ற போட்டியாகும் ஏனெனில் இதில் தோல்வியுற்றால் இந்திய அணி தொடரை முழுவதுமாக இழந்து விடும் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது.

லோகேஷ் ராகுல் காயம் காரணமாக, கடைசி நேரத்தில் இந்திய அணியிலிருந்து 211 ரன்கள் குவித்தும் பந்துவீச்சாளர்கள் சரிவர செயல்படாததால் தோல்வியை சந்தித்தது 2வது ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அந்த ஆட்டத்தில் 142 ரன்கள் இந்திய அணி ஆட்டமிழந்தது இதனால் தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்து வெற்றியடைந்தது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 29 ரன்னுக்குள்  3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்ஆப்பிரிக்கா அணி. ஆனால் முன்னணி வீரர்கள் கணிசமான அளவில் ரன் சேர்த்ததால் அந்த அணி கரை சேர்ந்தது.

இந்த நிலையில், இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ், ரிஷப் பண்ட், ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா, உள்ளிட்டோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்ததும் சுழற்பந்து வீச்சாளர்கள் அக்ஷர் பட்டேல் உள்ளிட்டடோர் தங்களுடைய பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கியதும் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்து விட்டது.

வேகப்பந்து வீச்சில் ஹார்திக் பாண்டியாவை தவிர்த்து மற்ற எல்லோரும் கனகச்சிதமாக செயல்பட்டார்கள். இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு உள்ளிட்ட 2லும் வலுவாக இருக்கிறது.

Previous articleபரபரப்பாக  காரை விட்டு இறங்கிய கலெக்டர்! எதற்கு இந்த திடீர் ஆய்வு!
Next articleஇந்திய அளவில் நோய் தடுப்பு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது!