கிடா முட்டு சண்டை! நீதிபதிகள் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

0
239

கம்பம் பகுதியைச் சார்ந்த தர்வேஷ் முகைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் தேனி மாவட்டம் கம்பம், அணிஷ் தோப்பு, மணிகட்டி ஆலமரம், பகுதியில் எதிர்வரும் 26 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் கிடா முட்டு சண்டை நடத்த கம்பம் நகர் மேற்கு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடந்த 8ஆம் தேதி மனு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இந்த மனுவுக்கு இதுவரையில் எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை. ஏற்கனவே கம்பம் அனிஷ் தோப்பு, மணிகட்டி ஆலமரம், பகுதியில் எதிர்வரும் 26 ஆம் தேதி காலை 7 மணி முதல் 4 மணி வரையில் கிடா முட்டு சண்டை நடத்த அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பிரகாஷ், ஹேமலதா, ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஏற்கனவே இந்த பகுதியில் 2 முறை கிடா முட்டு சண்டை போட்டி நடத்த அனுமதி கேட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிக கிடா சண்டை போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரிய வழக்கு எப்படி பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதோடு கிடா முட்டு சண்டை போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று யாரும் அடிப்படை உரிமையாக தெரிவிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Previous articleபள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு விடுமுறை !
Next articleஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும்! இத்தனை லட்சம் கடன் பெறலாம்! வங்கி வெளியிட்ட அறிவிப்பு!