அதிர்ச்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலிலிருந்து அகற்றப்பட்ட 3 விரல்கள்! காரணம் என்ன?

0
174

நடிகர் விஜயகாந்த் திரையில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் பேசும் வசனங்கள் அனைத்தும் தமிழக மக்களால் எப்போதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு வசனமாக இருந்து வந்திருக்கின்றன.

அவருடைய குரலிலேயே ஒரு கம்பீரம் எப்போதும் தென்படும், அதன் காரணமாகவே அவருக்கு கொடுக்கப்படும் வசனம் கூட கம்பீரமான வசனமாகத்தான் இருக்கும். அவர் திரையில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதியும் வண்ணம் இருக்கும்.

இவருடைய திரைப்படங்களில் பல இடங்களில் அரசியல்ரீதியான ஆழமான கருத்துக்கள் இருக்கும் அப்படி அரசியல்ரீதியான கருத்துக்கள் இருந்தாலும் அவை அனைத்தும் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் தான் இருந்திருக்கிறது.

இப்படி தன்னுடைய திரை பயணத்தின்போது அவ்வப்போது பொதுமக்கள் மனதில் பதியுமளவுக்கு அரசியல் வசனங்களை பேசி மெல்ல, மெல்ல, வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தவர் தான் நடிகர் விஜயகாந்த்.

இதன் பிறகு கடந்த 2005ஆம் வருடம் முதல் முதலாக தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2006ஆம் வருடம் துணிச்சலுடன் சட்டசபை பொதுத் தேர்தலில் தனித்து நின்று அவர் மட்டும் வெற்றி பெற்றார்.

இதன் பிறகு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது, அதோடு விஜயகாந்த் எதிர்க்கட்சிதலைவராக பொறுப்பேற்றார்.

ஆனால் காலப்போக்கில் அப்போதைய முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் அவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, மெல்ல, மெல்ல, இந்த கூட்டணி முறிந்தது.

இதனைத் தொடர்ந்து வந்த 2016ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தனி கூட்டணியமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் படுதோல்வியைச்சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அதோடு அடிக்கடி மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வந்தார்.

அவருடைய தொண்டையில் தைராய்டு பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள், இதற்காக அமெரிக்கா வரையிலும் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

இப்படியான சூழ்நிலையில், தற்போது தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த விதத்தில் சமீபத்தில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அவருடைய காலிலிருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக தெரிகிறது.

அவருடைய காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக அறிந்துகொண்ட அவருடைய ரசிகர்கள் அவர் மிக விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

Previous articleகனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு!
Next articleஎவராலும் அதிமுகவை அழிக்க முடியாது! நானே முன்னின்று காப்பேன் எடப்பாடிபழனிசாமி சபதம்!