தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!

0
140

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதை காண முடிகிறது.

மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று அணையிலிருந்து நீடு வெளியேற்றப்பட்டது.

கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது.

ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்திற்கு இயல்பாக 56 மில்லி மீட்டர் மழை கிடைக்கப்பெறுவது வழக்கம் என்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி அன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.01 மீட்டர் மழைபெய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் மழை நீர் சூழ்ந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleதேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் கைது!
Next articleராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை!