125 ஆண்டுகால பிரச்சனையை ஒரே இரவில் சரிசெய்ய முடியாது! மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி! 

Photo of author

By Sakthi

125 ஆண்டுகால பிரச்சனையை ஒரே இரவில் சரிசெய்ய முடியாது! மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி!
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனை என்பது 125 ஆண்டுகால பிரச்சனை. இந்த பிரச்சனையை ஒரே ஒரு இரவில் சரி செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் ‘மைசூர் சலோ’ என்ற பாதயாத்திரை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் குமாரசாமி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் இந்த மைசூர் சாலோ பாதயாத்திரையை மத்திய அமைச்சர் குமாரசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பேட்டியளித்த மத்திய அமைச்சர் குமாரசாமி அவர்கள் “நாங்கள் தமிழகத்திற்கு எந்தவொரு அநீதியையும் செய்யவில்லை. நீங்களும் நாங்களும் அண்ணன் தம்பி போல சகோதரர்களாக வாழ வேண்டும் என்பதை நான். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடக மாநிலத்திற்கு தேவையான தண்ணீரை பெற நாங்கள் உறுதியோடு போராடுவோம். மேலும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும் நேர்மையாக பாடுபடுவோம். நீர்வளத் துறையின் அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களின் உதவியோடு இந்த பிரச்சனைகளை தீர்க்க நாங்கள் பாடுபடுவோம்.
மேகதாது பிரச்சனை என்பது இப்போதைய பிரச்சனை இல்லை. அது 125 ஆண்டுகால பிரச்சனையாகும். இதை ஒரே ஒரு இரவில் தீர்க்க முடியாது. இதை சரி செய்ய முடிந்த அளவு நாங்கள் பாடுபடுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.