விழுப்புரம் அருகே பரபரப்பு! ஆட்டோவிலேயே குழந்தை பெற்றெடுத்த 17 வயது சிறுமி!

0
213

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து பக்கத்து வீட்டு இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

17 வயது சிறுமி சென்ற வருடம் 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 5 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், சிறுமிக்கு நேற்று வயிற்று வலி உண்டானது. இது தொடர்பாக அவருடைய தாயாரிடம் தெரிவித்த போது சிகிச்சைக்காக ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சிறுமிக்கு ஆட்டோவிலேயே பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாயும், சேயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த சிறுமைக்கு 17 வயதே ஆகிறது என்பதை அறிந்து கொண்ட மருத்துவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல் துறையைச் சார்ந்தவர்கள் விசாரணை செய்தார்கள்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. என்பது அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இதனையறிந்து கொண்ட காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை செய்வதற்காக கிராமத்திற்கு விரைந்து சென்றார்கள். அப்போது அந்த தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த இளைஞரின் தாயார் கூறினார்.

இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வடக்கு பதிந்த காவல்துறையினர் இளைஞரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Previous articleநீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஅதிமுக பொதுக்குழு விவகாரம்! ஓபிஎஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here