பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து மதிப்பு 7.5 கோடி! இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் யார் என்று தெரியுமா!!

Photo of author

By Sakthi

பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து மதிப்பு 7.5 கோடி! இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் யார் என்று தெரியுமா!!

Sakthi

Updated on:

பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து மதிப்பு 7.5 கோடி! இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் யார் என்று தெரியுமா!!

 

இந்தியாவில் மும்பையில் வசித்து வரும் ஒரு பிச்சைக்காரரின் சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய் என்று வெளியான தகவல் இந்தியாவில் உள்ள மற்ற பணக்காரர்களை வாய் பிழக்க செய்துள்ளது.

 

பிச்சைக்காரர்கள் என்று கூறினால் நமக்கு நியாபகத்திற்கு வருவது நடிகர் கவுண்டமணி அவர்களின் காமெடியும் நடிகர் விவேக் அவர்களின் காமெடியும் ஆகும். மேலும் தற்போது நியாபகத்திற்கு வருவது நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படமும் தான்.

 

இந்த திரைப்படங்களில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பிச்சைக்காரர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையான தோற்றம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகில் பல தொழில்கள் இருக்க தற்பொழுது பிச்சை எடுப்பதும் தொழிலாக மாறியுள்ளது.

 

என்னதான் பிச்சை எடுப்பவர்கள் ஏழைகளாக இருந்தாலும் பல பிச்சைக்காரர்கள் வெளியில் ஏழைகள் போன்ற தோற்றத்திலும் யாருக்கும் தெரியாமல் பணக்காரர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்து பணக்காரர் ஆகியுள்ளார்.

 

மும்பையில் வசித்து வரும் பாரத் ஜெயின் என்ற பிச்சைக்காரர் உலகிலேயே பணக்கார பிச்சைக்காரராக இருக்கிறார். பாரத் ஜெயின் அவர்கள் மும்பையில் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். பாரத் ஜெயின் அவர்களுக்கு திருமணமாகி மனைவி,  இரண்டு மகன்கள் ஆகியோர் உள்ளனர். மேலும் பாரத் ஜெயின் அவர்களுக்கு ஒரு சகோதரரும் தந்தையும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

 

பாரத் ஜெயின் அவர்களுக்கு மும்பையில் சொந்தமாக இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு பிளாட் உள்ளது என்றும் மேலும் தானே பகுதியில் இவருக்கு சொந்தமாக இரண்டு கடைகள் உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

 

இவருடைய இரண்டு கடைகள் மூலமாக மட்டும் மாதம் 30000 ரூபாய் வருமானமாக வரும் நிலையில் பாரத் ஜெயின் அவர்களுடைய மாத வருமானம் 60000 முதல் 75000 வரை கிடைக்கின்றது என்று தகவல் கிடைத்துள்ளது.

 

பாரத் ஜெயின் அவர்களின் மொத்தம் சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் சூரியா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் இது போலவே ஒரு பணக்கார பிச்சைக்காரரை இயக்குநர் காட்டியிருப்பார். அதன்படி பார்க்கும் பொழுது “அன்றே கணித்தார் சூரியா” என்ற வாசகம் நினைவுக்கு வருகின்றது.