அதானி குடும்பத்த்திற்கு வந்த எச்சரிக்கை.. இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கப் போகின்றது! ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ட்வீட் வைரல்!

Photo of author

By Sakthi

இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கப் போகின்றது! ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் டுவீட் வைரல்!
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஒரு பெரிய சம்பவம் நடைபெறப் போகின்றது என்று தற்பொழுது பதிவிட்டுள்ள டுவீட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிறுவனம் தான் இந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆகும். ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகில் நடைபெறும் நிதி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. மேலும் இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உலகில் நடைபெறும் நிதி தொடர்பான மோசடிகளை வெளிக்காட்டுவதும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் முக்கிய வேலையாக இருக்கின்றது.
உதாரணமாக கூற வேண்டும் என்றால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை ஒன்றால் அதானி குழுமம் பல நஷ்டங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் இந்த அறிக்கை அதானி குழுமத்திற்கு பல நஷ்டங்களை பெற்று தந்துள்ளது.
இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் 86 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு சரிவை சந்தித்தது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த அதானி குழுமம் உலகின் பணக்கார பட்டியலில் இருந்தும் இறக்கத்தை சந்தித்தது.
இதையடுத்து அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அதானி குழுமம் தொடர்ந்த இந்த வழக்கை செபி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் தன்னுடைய எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளது. அதாவது அந்நிறுவனம் பதிவிட்டுள்ள டுவீட்டில் “இந்தியாவில் மிகப் பெரிய சம்பவம் ஒன்று விரைவில் நடக்கப் போகின்றது” என்று பதிவிட்டுள்ளநு. இந்நிலையில் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த டுவீட்டால் இந்தியாவில் பல பெரிய நிறுவனங்கள் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.