திமுக எடப்பாடிக்கு போடும் தடை.. பொதுக்கூட்டத்திற்கு வந்த சிக்கல்!!

0
294
A case in the court to grant permission to the public meeting.. Will the campaign take place? take place?
A case in the court to grant permission to the public meeting.. Will the campaign take place? take place?

ADMK: கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிராகரித்ததை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் வலியுறுத்தியதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஜனநாயக உரிமைக்குட்பட்டது என்பதுடன், எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டது.

எனவே போலீசார் மறுப்பு தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனு அளிக்கப்பட்டது. எதிர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் கோரும் இடத்தில் அனுமதி வழங்க இயலாது. இதனால் மாற்று இடத்தை பரிந்துரைக்குமாறு கூறினார். இந்நிலையில், கரூர் போன்ற பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெறுமா என்பது மீண்டும் அரசியல் வட்டாரங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு அதிமுக பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதால், இந்த உத்தரவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. மேலும் இது எதிர்க்கட்சியின் சதி என்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே தவெகவின் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காமல், அலைக்கழித்து வந்தது அதன் மேல் உள்ள பயத்தினால் தான் என்று கூறி வந்த நிலையில், எதிர்கட்சியான அதிமுகவிற்கும் அனுமதி அளிக்காமல் இருப்பது அந்த வாதத்தை உறுதி செய்வதை போல் உள்ளது என்றும் கூறுகின்றனர்.

Previous articleட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் கொடுக்கும் டிடிவி.. உறுதியான கூட்டணி!
Next articleஅண்ணாமலையின் புதிய திருப்பம்.. மூன்றாவது சக்தியாக மாறுமா?