பாஜக எம்.பி மண்டை உடைப்பு  விவகாரம்!! ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு!!

Photo of author

By Sakthi

Rahul Gandhi: ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இக்   கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதங்கள் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அமைச்சர் அமித் ஷா சட்டமேதை  அம்பேத்கரை  அவமதிக்கும் வகையில் பேசினார்.

அதாவது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்றும், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரை பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்”  என பேசி இருந்தார். எனவே அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதித்து  பேசி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு நாடு முழுக்க அரசியல் தலைவர்களால் முன் வைக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணியில் இருக்கும் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை இருக்கும் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாஜக எம்பிக்கள் காங்கிரஸ் கட்சியினர் தான் அம்பேத்கரை அவமதித்தார்கள் என கூறி எதிர் கட்சியினர் போராட்டம் செய்யும் பகுதியின் அருகில் இவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அப்போது, இது தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி தலையில் பலத்த காயமடைந்து இருக்கிறார். அதற்கு  ராகுல் காந்தி தான் காரணம் என தெரிவித்தார். எனவே, ராகுல் காந்தி மீது கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.