விஜயகாந்த் படத்தில் வருவது போல உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை! காசாவில் நடந்த சம்பவம்! 

Photo of author

By Sakthi

விஜயகாந்த் படத்தில் வருவது போல உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை! காசாவில் நடந்த சம்பவம்!
மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் வருவது போலவே காசாவில் இறந்த கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் பலர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேல் நாட்டிலிருந்து 200க்கும் மேற்பட்டவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து கொந்தளித்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. தங்களுடைய நாட்டிலிருந்து பிணையக் கைதிகளாக சிறைபிடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அதன் படி இஸ்ரேல் ராணுவம் காசா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதைப் போல சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலன் இன்றி ஒரு சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனை செய்து பார்த்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு இதயத் துடிப்பு இருந்தது.
உடனடியாக அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர். தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடித்த ஒரு படத்தில் இதோ போல காட்சி இருக்கும். தற்பொழுது அந்த காட்சியை போலவே இறந்த தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.