Breaking News

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மரணம்!

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த பிரபல நடிகர்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மரணம்!
பிரபல ஹிந்தி நடிகர் நித்தேஷ் பாண்டே அவர்கள் ஓட்டல் அறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல ஹிந்தி நடிகரான நித்தேஷ் பாண்டே அவர்கள் 1995ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பாஸி திரைப்படம் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர். மறைந்த நடிகர் நித்தேஷ் பாண்டே அவர்கள் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் நித்தேஷ் பாண்டே அவர்கள் கடைசியாக சென்ற வருடம்(2022) வெளியான பாதாய் டு திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் அனுபாமா என்ற வெப்தொடரில் நடித்து வந்தார்.
51 வயதாகும் நடிகர்  நித்தேஷ் பாண்டே அவர்கள் பணி காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள இகட்புரி என்னும் இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் அந்த அறையிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் நடிகர் நித்தேஷ் பாண்டேவின் உடலை கைபபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் போலிஸார் தரப்பில் நடிகர் நித்தேஷ் பாண்டே அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.