Shah Rukh Khan : வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கிய நடிகர் ஷாருக்கான்!

Photo of author

By Jeevitha

Shah Rukh Khan : பிரபல இந்தித் திரைப்பட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ஷாருக்கான் அவர்கள் தீவானா என்றத் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னாளில் இவரை கவுரவப் படுத்தும் விதமாக ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது.

தேவதாஸ், ஜவான், பதான் போன்ற படங்கள் ஷாருக்கான் அவர்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஷாருக்கான் அவர்கள் கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவர்.

வருடந்தோறும் லோகார்னோ திரைப்பட விழாவானது லோகார்னோ என்ற பகுதியில் நடைபெறும். ஐரோப்பியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டில் லோகார்னோ என்ற பகுதியில் 77 ஆவது திரைப்பட விழா நடைபெற்றது.

இந்த விழாவின்போது நடிகர் ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து திரையில் சில காட்சிகள் வெளியிடப்பட்டன. அக்காட்சிகள்  ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுடைய காட்சிகள் ஆகும்.

இவ்விழாவில் பெருமை வாய்ந்த நடிகர் ஷாருக்கான் அவர்களின் நடிப்பில் வெளியான தேவதாஸ் திரைப்படமானது திரையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஷாருக்கான் அவர்களின் ரசிகர்களின் கேள்வி பதில் உரையாடல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஷாருக்கான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்ட பின் ஷாருக்கான் அவர்கள் சிலவற்றைப் பேசினார். அதில் இவ்விழாவில் கலந்துகொண்ட அம்மக்களின் கூட்டத்தினை நோக்கி அவர் இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிப்பார் என்றும், இந்த இடத்தில் இருப்பது மிகுந்த சந்தோசத்தைத் தந்துள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.