NTK:நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரபல பெண் நிர்வாகி விலகி இருக்கிறார்.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி கடந்த 2009 ஆண்டு சீமான் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ் தேசிய கொள்ளையை முதன்மையாக கொண்டு இருக்கிறது. இதுவரை உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற ,பாராளுமன்ற என 6 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இருப்பினும் இக் கட்சியில் இருந்து ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு செல்லவில்லை. ஆனால் ஒரு சதவீதத்தில் இருந்து,தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
அதாவது 30 லட்சம் வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறது. இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு இன்னும் முழு இல்லாமல் இருக்கிறது.மேலும் உட்கட்சி பூசல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே நிலவி வருகிறது. இதனால் முக்கிய கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் விலகினார்.
அவரைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட வடக்கு தொகுதி பொறுப்பாளர் என தற்போது கட்சியின் மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இலஞ்சி விலகி இருக்கிறார்.அவர் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் அது குறித்து சீமானிடம் தெரிவித்ததற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் சம பங்கு கொடுக்கப்பட்டு வருகிறது ,பொதுவாக தேர்தலில் ஆண் ,பெண்ணுக்கு சரிக்கு சமமாக தொகுதிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.