ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள்

Photo of author

By Sakthi

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஒரு மீன் மட்டும் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இங்கு ஒரு மீன் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆனது மக்களை ஆச்சரியத்தில் மூழ்கிப் செய்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் கெஜின்னரா என்ற பகுதிக்கு எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலையை வீசி காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய வலையில் புலசா மீன் சிக்கியது.

இந்த புலசா மீன் மற்ற மீன்களை போலத்தான். இருந்தாலும் எடைக்கு எடை என்ற விகிதத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். புலசா மீன் விற்பனை பற்றி இதற்கு முன்னர் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதே போலத்தான் தற்பொழுது செங்கழுநீர் கோதாவரி ஆற்றில் மீனவர் ஒருவருடைய வலையில் சிக்கிய இந்த புலசா மீன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இந்த புலசா மீன் ஏலம் விடப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் புலசா மீனை வாங்குவதற்கு பலனும் கடும் போட்டி போட்டனர். இறுதியாக ஒரு இந்த மீனை இலங்கையை சேர்ந்த ஒருவர் 24000 ரூபாய் விலை கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளார்.

24000 ரூபாய்க்கு விற்பனை ஆனதற்கு காரணம் இந்த புலசா மீன் மிகவும் சுவையாக இருப்பது தான். இந்த புலசா மீனில் ஒமேகா 3 கொழுப்புச் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இந்த புலசா மீன் நம்முடைய கண்களுக்கும் சருமத்திற்கும் பல வகையான நன்மைகளை வழங்குகின்றது. இதில் இருக்கும் ஆரோக்கியமான குணங்களுக்காகவே புலசா மீனை மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.