தினமும் நமது வீடுகளில் விளக்கு என்பதை கட்டாயம் ஏற்ற வேண்டும். விளக்கின் ஒளி நமது வீட்டில் இருந்தால்தான் நமது குடும்பத்தில் பிரகாசம் என்பது உருவாகும் எனவும் கூறப்படுகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து தினமும் பூஜை அறையில் விளக்கினை ஏற்றுவது பல சிறப்புகளை தேடி தரும். அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில், தினமும் நமது வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றுவது சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
நமது வீட்டில் மட்டுமல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும், நெய் தீபம் போட்டு ஏற்றினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். நாம் ஏற்றக்கூடிய நெய் தீபங்களின் எண்ணிக்கையை பொறுத்து அதற்கான பலன்களும் வேறுபடும்.
நெய் தீபம் 5 ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும், 9 நெய்விளக்குகளை ஏற்றினால் நவக்கிரக தோஷங்கள் விலகும், 12 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி, முன்னெடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும்,18 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால், கால சர்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும், 27 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் திருமண தடை விலகும், புத்திர பாக்கியம் உண்டாகும்.
36 நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வந்தால் சகல தோஷமும் நீங்கும். 48 நெய்விளக்கு ஏற்றினால் தொழில் விருத்தியாகும். 108 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அம்மனின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்பார்கள்.
21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகுமாம்.தொழிலில் முன்னேற்றமின்மை, வியாபார தடங்கல்கள் இருந்தால், சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும்.
சூரிய உதய நேரத்திலும், சூரியன் மறையும் நேரத்திலும் நெய் விளக்கு ஏற்றும்போது, சுற்றுச்சூழல் சீராகி, காற்று சுத்தப்படுத்தப்படுகிறது.இதனால், குடும்பத்திலுள்ளவர்களின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது. அதனால்தான், பிரம்ம முகூர்த்த நேரத்திலும், மாலை நேரங்களிலும், வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட சொல்கிறார்கள். துளசிக்கு முன்னாலும் நெய் தீபம் ஏற்றலாம்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்பட்டால், அருகிலுள்ள கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றிவைத்து, பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். இதனால் இன்னல்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்தவகையில், கோயில்களில், அதிகாலை, நண்பகல், அந்தி பொழுதில், நெய் தீபம் ஏற்றுவது அதீத பலனை தரும்.
அதேபோல, அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது. அதனால்தான் கோவில்களிலும் சரி, வீடுகளிலும் சரி தீபம் ஏற்றும் பொழுது நெய் தீபம் ஏற்றினால் நாம் வேண்டிய அனைத்தும் நிறைவேறும். மிகவும் சக்தி வாய்ந்த தீபம் எனவும் கூறப்படுகிறது.