அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!!

Photo of author

By Pavithra

அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன்(65) மற்றும் இவரது மனைவி லட்சுமி(59).இவர்கள் தற்போது ஜெயா நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியுள்ளனர்.சுப்பராயன் காவலராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் சுப்புராயன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ராமலிங்க நகரைச் சேர்ந்த சரவணன்(55) என்பவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் மாடுகளும் வளர்த்து வருகின்றார்.
சரவணனின் மாடுகள் அடிக்கடி,சுப்புராயன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைவது வழக்கமாக இருந்திருக்கின்றது.
இதனால் சுப்பராயன் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி ஆகிய இருவரும் மாடுகளை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க வேண்டுமென்று சரவணனிடம் கூறியுள்ளனர்.
ஆனால் சரவணன் திமிராக பேசியதாக கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே சட்டென்று,வயதானவர்கள் என்றுகூட பார்க்காமல் சரவணன் அவர்களை நடுரோட்டில் செருப்பால் அடித்துள்ளார்.இந்த காட்சியானது தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் தற்போது இந்த காட்சியானது சமூகவலைத்தளங்களில் பரவவே அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக சுப்புராயன் அளித்த புகாரின் பெயரிலும்,சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் தன்வந்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.