விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!!! மாரடைப்பால் கலை இயக்குநர் மிலன் காலமானார்!!! 

Photo of author

By Sakthi

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்!!! மாரடைப்பால் கலை இயக்குநர் மிலன் காலமானார்!!!
விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் அவர்கள் இன்று(அக்டோபர்15) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் விடாமுயற்சி படக்குழுவினர். மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகின்றது. விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது அஜர்பைஜான் நாட்டில் கந்த 4ம் தேதி தொடங்கியது. விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
விடாமுயற்சி திரைப்படத்திற்கு கலை இயக்குநராக மிலன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கலை இயக்குநர் மிலன் அவர்கள் நடிகர் ஆரியா நடிப்பில் உருவான கலாப காதலன் திரைப்படத்தின் மூலமாக கலை இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் அஜித் நடித்த பில்லா, வீரம், வேதாளம், விவேகம், துணிவு ஆகிய ஐந்து திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் நடித்து வரும் 62வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்திற்கும் கலை இயக்குநராக பணியாற்ற மிலன் அஜர்பைஜான் சென்றார். இந்நிலையில் இன்று(அக்டோபர்15) காலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு காரணமாக அவர். காலமானார். இவருடைய மறைவு விடாமுயற்சி படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்நிலையில் மறைந்த கலை இயக்குநர் மிலன் அவர்களின் உடலுக்கு நடிகர் அஜித், இயக்குநர் மகிழ்திருமேனி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கலை இயக்குநர் மிலன் அவர்கள் மறைவு காரணமாக விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர்15) இரத்து செய்யப்பட்டுள்ளது.