அப்பாவுடன் ஹிட் படம்! மகனுடன் பிளாப் படம்! யார் அந்த பிரபல நடிகை தெரியுமா?

Photo of author

By Sakthi

அப்பாவுடன் ஹிட் படம்! மகனுடன் பிளாப் படம்! யார் அந்த பிரபல நடிகை தெரியுமா?
அப்பா மற்றும் மகன் என இரண்டு பேருடன் நடித்து அதில் ஒரு படம் ஹிட் மற்றும் மற்றொரு படம் பிளாப் கொடுத்த நடிகை யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்திய சினிமாவில் அப்பா மற்றும் மகன், அண்ணன் மற்றும் தம்பி என இரண்டு பேருடனும் நடிகைகள் நடித்து வருகின்றனர். அவ்வாறு நடிக்கும் பொழுது திரைப்படங்கள் ஹிட் ஆவதும் பிளாப் ஆவதும் வழக்கம்.
மேலும் முன்பு ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடித்த நடிகைகள் தற்பொழுது சகோதரியாக, அம்மாவாக நடித்தும் வருகின்றனர். உதாரணமாக நடிகைகள் ராதிகா, சரண்யா பொன்வண்ணன், ராதிகா, நதியா, சிம்ரன் மேலும் பல நடிகைகள் இருக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல் நன்கு பிரபலமாக மார்கெட் கொண்ட நடிகையாக இருந்தால் இளம் வயது என்றாலும் வயது வித்தாயசம் இல்லாமல் கதாநாயகியாக நடிக்க அழைக்கும் நடிகர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் மகனுடன் நடித்து பிளாப் கொடுத்து அப்பாவுடன் நடித்து ஹிட் கொடுத்த நடிகை யார் என்பதை பற்றி பார்க்கலாம். அது வேறு யாரும் இல்லை. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகள் ஸ்ருதிஹாசன் அவர்கள் தான்.
ஸ்ருதி ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவருக்கு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது.
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் நடிகர் ஜூனியர் என்டிஆர் அவர்களுடன் இணைந்து ராமையா வஸ்தாவையா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நினைத்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. மேலும் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு இந்த திரைப்படம் பிளாப் திரைப்படமாக அமைந்தது.
இதையடுத்து நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் நடிகர் பாலையாவுடன் இணைந்து நடித்த வீர சிம்ம ரெட்டி திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் சீனியர் நடிகர்களுடன் ஸ்ருதிஹாசன் அவர்களின் அதிர்ஷ்டம் வேலை செய்கின்றது என்றும் இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் பொழுது அதிர்ஷ்டம் வேலை செய்யவில்லை என்றும் பேசப்பட்டு வருகின்றது.
மேலும் நடிகர் ஜூனியர் என்டிஆர் அவர்களின் பெரியப்பா தான் நடிகர் பாலைய்யா என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. நடிகர் பாலையா அவர்களின் தம்பி நந்தமுரி ஹரிகிருஷ்ணன் அவர்களுடைய மகன் தான் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆவார்.