DMK PDK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் பேசப்பட்டு வரும் தருவாயில், பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். அதனை மிஞ்சும் வகையில் அமைந்தது தான் விஜய்யின் வருகை. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் திராவிட கட்சிகள் தங்களது கூட்டணி கணக்குகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடனும், தமாக உடன் மட்டுமே கூட்டணியில் உள்ள நிலையில், திமுக உடன், விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் நீண்ட காலமாக கூட்டணியில் உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் வெளி வராதா சில சச்சரவுகள் இருந்தாலும், திமுக கூட்டணியில் அது வெளி படையாகவே தெரிகிறது. காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் கேட்டு வலியுறுத்தி வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
அது மட்டுமல்லாது, மதிமுக கட்சி இந்த தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என வலியுறுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் புதிய திராவிட கழகம் என்னும் கட்சி சேர்ந்திருப்பது திமுக தலைமைக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

