சாலையோரம் காகிதம் சேகரித்தவருக்கு 12000 சம்பளத்துடன் வேலை! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சரின் செயல்!
சென்னையில் சாலையோரம் காகிதம் எடுத்துக் கொண்டு சென்ற நபருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் 12000 சம்பளத்துடன் வேலை வாங்கி கொடுத்த சம்பவம் அனைவருக்கும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று(ஜூலை22) காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த வழியில் ஒருவர் காகிதம் சேகரித்துக் கொண்டு சென்றார்.
இதை பார்த்த அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் காகிதம் சேகரித்த நபரை அழைத்து அவருடைய தகவல்கள் கேட்டார். அதன் பின்னர் அந்த நபரை அழைத்துக் கொண்டு தன்னுடைய காரிலேயே அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
பின்னர் அங்கேயே அந்த காகிதம் சேகரித்த நபருக்கு புதிய ஆடை வழங்கினார். பின்னர் உணவு வாங்கிக் கொடுத்தார். அதன் பின்னர் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்து வேலையில் சேர்த்து விட கூறினார்.
அதன்படி காகிதம் சேகரித்த அந்த நபரை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார். பின்னர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளனர்.
இதையடுத்து காகிதம் சிரித்துக் கொண்டிருந்த அந்த நபருக்கு மாதம் 12000 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கிக் கொடுத்த அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.