மேல்மருவத்தூர் அருகே நடைபெற்ற கோர விபத்து! அதிமுகவை சார்ந்த 10 பேர் படுகாயம் பொதுக்குழுவிற்கு சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!

0
180

சென்னை வானகரத்தில் நடக்கும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருக்கின்ற உளுந்தை கிராமத்தைச் சார்ந்த 15க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் இன்று காலை 5 மணியளவில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் இந்த வேன் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்சாலையான சென்னை, திருச்சி, தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி சாலை நடுவே இருக்கின்ற தடுப்பு சுவரில் ஏறி எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் உடன் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்த 4 பேர் மற்றும் சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்றுக்கொள்ள வேனில் சென்ற அதிமுக கட்சியைச் சார்ந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல்மருவத்தூர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்.

அதோடு இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

Previous articleஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரங்கள் என்னென்ன?
Next articleசேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!