தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது இதனை தொடர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது தெற்கு அந்தமான் பகுதியில் உண்டான வளிமண்டல சுழற்சி காட்டெடுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுவிட்டது.
மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது காற்றழுத்த தழுப்பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக உருவாகும்.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது இதனை தொடர்ந்து இரண்டு நாட்களில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுபெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளது.