ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!
உலகம் முழுவதும் நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படதத்தை காண்பதற்கு திடீரென்று தியேட்டருக்குள் குரங்கு ஒன்று வந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை பாடி ஆரவாரம் செய்தனர்.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை கிரித்தி சனோன், சயிப் அலிகான், சன்னி சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் இராமயணத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இராமர் கதாப்பாத்திரத்திலும் தசரதன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகை கிருத்தி சனோன் சீதா தேவி கதாப்பாத்திரத்திலும், நடிகர் சயிப் அலிகான் இராவணன் கதாப்பாத்திரத்திலும், நடிகர் சன்னி சிங் லட்சுமனன் கதாப்பாத்திரத்திலும், நடிகர் தேவ்டட்டா நாகே அவர்கள் அனுமான் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஒரு இருக்கையை அனுமானுக்காக விட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி எல்லா திரையரங்குகளிலும் ஒரு இருக்கை அனுமானுக்காக விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான திரையரங்கு ஒன்றில் திடீரென்று குரங்கு ஒன்று உள்ளே வந்தது. இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியௌ இனையத்தில் வைரலாகி வருகின்றது.