பானிபூரி கடை வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! உணவுத்துறை அதிகாரி போட்ட கட்டளை! 

Photo of author

By Sakthi

பானிபூரி கடை வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! உணவுத்துறை அதிகாரி போட்ட கட்டளை!!
பானிபூரி வைத்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவருக்கும் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைநியமன அலுவலர் சதீஷ்குமார் அவர்கள் முக்கியமான கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பொதுவாக பலருக்கும் சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் காளான், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுகள் மிகவும் பிடித்த உணவுகள். அதிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் முக்கியமான சாலையோர உணவு என்றால் பானிபூரி தான்.
பானிபூரியை மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதிலும் வடநாட்டுக்காரர்கள் விற்பனை செய்யும் பானிபூரி என்றாலே மக்களுக்கு தனி இஷ்டம் என்று கூறலாம். ஆனால் சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் எல்லாம் சாலையோர உணவுகளை சாப்பிட தயக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. அதிலும் முக்கியமாக வடநாட்டுக்காரர்கள் விற்பனை செய்யும் பானிபூரியை வாங்கி சாப்பிட கொஞ்சம் தயக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைநியமன அலுவலர் சதீஷ்குமார் அவர்கள் முக்கியமான கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சென்னையில் நேற்று(11.07.2024) சாலையோர உணவு விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் சாலையோர பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பாக சென்னை ரிப்பன் பில்டிங் வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சாலையோர வியாபாரிகள் 627 பேர் கலந்து கொண்டனர்.
இந்த சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் தோல் தொடர்பான பிரச்சனை எதாவது இருக்கின்றதா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிந்த பின்னர். சாலையோர வியாபாரிகளுக்கு பதிவு உரிமம், புதுப்பித்தல் சான்றிதழ்கள் ஆகியவை இந்த மருத்துவ முகாமில் வழங்கப்பட்டது.
இதையடுத்து பேசிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைநியமன அலுவலர் சதீஷ்குமார் அவர்கள் “சென்னை மாவட்டம் முழுவதும் மண்டலம் வாரியாக மருத்துவ முகாம் நடத்தப்படும். குறிப்பாக பானிபூரி விற்பனை செய்பவர்களுக்கு எப்படி சுகாதாரமான முறையில் விற்பனை செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் அவர்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்படும். அவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும். இனிமேல் அனைத்து பானிபூரி வியாபாரிகளும் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.