Uganda: உகாண்டா நாட்டில் பெண்களுக்கு மட்டும் பரவும் மர்ம காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உலகின் நவீனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அதே, அளவிற்கு இயற்கை அழிவுகளும் ஏற்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கொரோனா நோய் பரவலை எடுத்துக் கொள்ளலாம். புதுப்புது நோய்கள், இயற்கை பேரிடர்களும் உருவாகி கொண்டே தான் இருக்கிறது. தற்போது ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டில் புண்டிபுக்யோ மாவட்டத்தில் மட்டும் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது.
இந்த நோய் குறிப்பாக பெண்களை மட்டும் பாதிக்கிறது. இந்த நோயால் பாதித்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது. இது வரை இந்த மர்ம காய்ச்சலுக்கு 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டோர் ஒரு வாரக் காலத்தில் குணம் அடைந்து விடுகிறார்கள் என்பது அந்த நாட்டில் சற்று பதற்றத்தை குறைத்து உள்ளது.
ஆனால், இந்த நோய் எதனால் ஏற்பட்டு இருக்கிறது. எப்படி பரவுகிறது என்பது பற்றி இன்னும் கண்டறியப்படவில்லை. புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இந்த நோய் பரவுவது இல்லை. எனவே அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆய்வு செய்து வருகிறது அந்த நாட்டு சுகாதாரத்துறை. உலக வரலாற்றை பார்க்கும் போது இது போன்ற மர்ம நோய்கள் பரவி இருப்பதற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கி.பி 1518 ல் பிரான்ஸ் நாட்டில் “டேன்சிங் ப்ளேக்” என்ற மர்ம நோய் பரவியது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர் சாகும் வரை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் என்பதற்கான குறிப்புகள் உள்ளது.