ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆனால் கட்சி பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. குறிப்பாக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பதவிகளிலிருந்து இ.பி.எஸ் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியிடமும் பேச்சுவார்த்தை நடந்தபடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது நடந்துள்ளது. இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணித் திட்டங்கள் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பாஜக-அதிமுக இடையே ஏற்பட்டிருந்த தகராறு மற்றும் இடைவெளி சரியாகும் சூழல் உருவாகுமா என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியின் நிலைப்பாடு, அடுத்தடுத்த கூட்டணி மற்றும் அரசியல் சூழ்நிலைகளை அமித்ஷாவிடம் விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த வலுவான கூட்டணி தேவை என்பதில் அமித்ஷா வலியுறுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையன் வலியுறுத்தியதை குறிப்பிட்டு நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வலியுறுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று இ.பி.எஸ் பிடிவாதமாக இருக்கும் நிலையில் அமித்ஷாவின் வேண்டுகோளுக்கு பணிவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த சந்திப்பு நிறைய புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், இ.பி.எஸ்-பாஜக உறவில் புதிய பரிமாணம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.