மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு!

Photo of author

By Hasini

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலோ, கொரோனா என்பது போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. வௌவால்களில் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தெற்கு மாகாணத்தில் வைரஸ் நோய் காரணமாக ஒரு நோயாளி இறந்து விட்டார். அந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இந்த கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கினியாவில் எபோலா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிய மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உலகம் அழிய இதெல்லாம் தான் அறிகுறிகள் போல. வந்துட்டான் யா வந்துட்டான் என்பது போல கொரோனா வந்தது, தொடர்ந்து ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் என வரிசை கட்டி வந்த நிலையில், கேரளாவில் வந்த ஜிகா வைரஸ், அடுத்து வந்த குரங்கிலிருந்து வந்த மங்கி பாஸ் வைரஸ், என தற்போது மார்பர்க் வைரஸ் இதை சொல்லும் போதே கொடிய வைரஸ் என்று சொன்னால் நம் நிலைமை எல்லாம் என்னவென்று யோசித்து கொள்ளுங்கள்.

இது இல்லாமல் இயற்கை பேரழிவுகள் வேறு பல மக்களை சூழ்ந்து வருகின்றன. எனவே மக்களே முடிந்தவரை மகிழ்ச்சியாகவும், பிறரிடம் அன்பாகவும் இருங்கள் எவ்வளவு நாள் நமக்கு எல்லாம் கணக்கு என்று தெரியவில்லை.