நமது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பது மென்மேலும் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கும், நமது எதிர்கால சன்னதிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதித்து, நாம் ஒன்று நினைத்து பணத்தை சேமித்து வைத்தால், அது வீண் செலவாக அதிலும் தேவையில்லாத விரைய செலவாக ஆனால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும்.
ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயங்கள் ஆகாமல், மென்மேலும் நமது பணத்தை சேமித்து வைப்பதற்கு என ஒரு சிறந்த வழிகள் உள்ளது. அந்த வழியை பின்பற்றினால் நமது வீட்டில் எப்பொழுதும் நிலையான மற்றும் குறையாத செல்வங்கள் என்பது எப்பொழுதும் நீடித்து இருக்கும்.
அதிர்ஷ்டம் தரக்கூடிய வேர்:
ஒரு செடி, மரம், இலை, பூ இது போன்றவைகளில் இருந்து நல்ல செல்வமும், நல்ல வரமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ஒரு வேரின் மூலம் நமது வாழ்க்கைக்கு தேவையான சந்தோஷம், நிம்மதி, பணவரவு ஆகிய அனைத்தையும் பெற முடியும் என்பதை நம்முள் பலரும் அறியாமல் இருப்போம்.
ஒரு பெரிய மரமாக இருந்தாலும் சரி, சிறிய செடியாக இருந்தாலும் சரி அதனுடைய செழுமைக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருப்பது அதன் வேர் தான். அந்த வேர்தான் அந்த செடியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்.
வேர்களின் முக்கிய பணி என்பது செடிகளுக்கு தேவையான சத்துக்களையும், நீரினையும் உரிந்து கொடுப்பது. இவ்வாறு இந்த வேர் செடிகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுப்பதன் மூலம், அந்த செடி மென்மேலும் வளர்ச்சி அடைந்து மிகப்பெரிய மரமாக மாறும்.
அதேபோன்றுதான் இந்த வேரினை நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது நமது வீட்டில் உள்ள செல்வ வளம் என்பது மென்மேலும் வளர்ச்சி அடையும் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வாறு திகழக்கூடிய சில குறிப்பிட்ட சக்தி வாய்ந்த வேர்களைப் பற்றிதான் தற்போது காணப் போகிறோம்.
1. கீழாநெல்லி செடியின் வேர்:
மருத்துவ குணம் நிறைந்த இந்த கீழாநெல்லி செடியின் வேரினை நமது கையாலோ அல்லது கற்களைக் கொண்டோ வேர் அறுபடாமலும் பிளவு படாமலும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு சம்பந்தமான பொருட்களைக் கொண்டு இந்த வேரினை எடுக்கக் கூடாது.
இவ்வாறு எடுத்த அந்த வேரினை பசு மாட்டின் கோமியத்தில் நன்றாக கழுவி விட்டு, ஒரு வெற்றிலையில் அந்த வேரினை வைத்து மடித்து சுருட்டி நமது வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும்.
2. நாயுருவிச் செடியின் வேர்:
இந்த செடியானது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. இந்தச் செடியின் வேரினையும் எடுத்து, பசு மாட்டின் கோமியத்தில் கழுவியப் பின்னர், அந்த வேரினை குங்குமம், குண்டு மஞ்சள் ஆகியவற்றுடன் சேர்த்து மஞ்சள் நிற துணியில் கட்டி பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
3. ஆலமரத்தின் விழுது:
இந்த விழுதானது அடகு வைத்த நகையை மீட்பதற்கு பெரிதும் உதவும் ஒரு சக்தி வாய்ந்த பொருள். நாம் இழந்த பணம் மற்றும் நகையை மீட்டுக் கொடுக்கும் சக்தி இந்த ஆலமரத்தின் விழுதிற்கு உண்டு.
இந்த விழுதினை பசு மாட்டின் கோமியத்தில் கழுவி விட்டு, பச்சை கற்பூரத்தை எரிய செய்து அதன் சூடு இந்த வேரின் மேல் படும்படி காட்ட வேண்டும். கருக விடக்கூடாது, லேசாக காட்ட வேண்டும். அதன் பிறகு ஒரு வெற்றிலையில் இருந்த வேர், பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, மஞ்சள் நூல் கொண்டு கட்டி, ஒரு துணியில் இதனை சுருட்டி பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
4. வெள்ளருக்கன் செடி வேர்:
இந்த செடியானது விநாயகரின் மகிமையை பெற்றது. இந்தச் செடியின் மூலம் சர்வ சித்தி காரிய வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும். அதாவது அனைத்து விதமான வெற்றிகளையும் கொடுக்கக் கூடியது இந்த செடி.
இந்த வேரினை எடுத்து பசு மாட்டின் கோமியத்தில் கழுவியப் பின்னர் விநாயகருக்கு எவ்வாறு பூஜை செய்வோமோ அதனைப் போன்று இந்த வேருக்கும் பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு சிவப்பு நிற நூலினால் அந்த வேர் தெரியாதவாறு சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வெற்றிலையில் அந்த வேரினை வைத்து மடித்து பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.