நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் நகையை மீட்க சக்தி வாய்ந்த ஒரு வழி..!! மூன்று மாதத்தில் உங்கள் வீடு வந்து சேரும்..!!

Photo of author

By Janani

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் நகையை மீட்க சக்தி வாய்ந்த ஒரு வழி..!! மூன்று மாதத்தில் உங்கள் வீடு வந்து சேரும்..!!

Janani

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.

அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது சிறிது சிறிதாக நமது ஆபரணங்களை மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு அமையும்.

நமது குடும்பத்தில் ஏதேனும் விசேஷங்கள் என்றால் நமது தங்க நகைகளை போட முடியவில்லையே என ஏங்குகிற அனைவருக்கும் இந்த பரிகாரம் பலனளிக்கும். இந்த பரிகாரம் நமது வீட்டில் இருந்தே செய்யக்கூடிய மற்றும் குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரம் ஆகும்.

மூன்று குண்டு மஞ்சளை வைத்து தான் நாம் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம். இந்த பரிகாரம் செய்வதற்கு உகந்த நாள் வியாழன் கிழமை. எனவே வியாழன் கிழமை அன்று குரு ஹோரை நேரத்தில் இந்த பரிகாரத்தை நாம் செய்து கொள்ளலாம்.

இந்த குரு ஹோரை நேரமானது அதிகாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரையிலும் இருக்கும். இந்த மூன்று நேரத்தில் நம்மால் எந்த நேரத்தில் செய்ய முடியுமோ அந்த ஒரு நேரத்தில் செய்து கொள்ளலாம்.

வீட்டில் உள்ள பெண்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று வியாழன் கிழமை செய்ய வேண்டும். ஒரு வாரம் ஏதேனும் தடை ஏற்பட்டால் ஒரு வாரம் விட்டு, அடுத்த வாரம் கூட இதனைத் தொடர்ந்து செய்துக் கொள்ளலாம்.

நகைகளை அடமானத்தில் வைக்காதவர்கள் கூட, தனது பெண் குழந்தைகளுக்காக நகைகளை சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொண்டும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

வியாழன் கிழமை என்பது குரு பகவானின் ஆதிக்கத்திற்கு உரிய நாளாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் மட்டுமே, அவர் வாழ்க்கையில் உச்சத்தை அடைய முடியும். நமக்கு தேவையான அனைத்தையும் தரக்கூடியவர் குரு பகவான். எனவே அவருக்கு உகந்த வியாழன் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வதுதான் சிறப்பு.

முதல் வார வியாழன் கிழமை அன்று ஒரு மஞ்சள் நிற துணியில் ஒரு குண்டு மஞ்சள் மட்டும் வைத்து, அதனுடன் நாம் அடமானம் வைத்திருக்கும் நகையின் சீட்டையும் சேர்த்து மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயின் முன்பாக அதனை நமது கையில் வைத்துக்கொண்டு “ஓம் சொர்ணஸ்ரஜே நமஹ”என்ற மந்திரத்தை நம்மால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூறி வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று அடுத்த வார வியாழன் கிழமை அன்று இன்னொரு குண்டு மஞ்சளையும் சேர்த்து வைத்து இந்த மந்திரத்தை கூறி வேண்டிக் கொள்ள வேண்டும். இதே போன்ற தொடர்ந்து மூன்று வாரம் செய்த பிறகு அந்த மஞ்சளை உடைத்து தூளாக செய்து நமது தாலி சரடு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்துக் கொள்ளலாம் அல்லது வீடு சுத்தம் செய்யும் தண்ணீரில் சேர்த்தும் துடைக்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரம் இந்த எளிய பரிகாரத்தை முழு நம்பிக்கையுடனும், கடவுள் பக்தியுடனும் செய்யும்பொழுது நமது அடகு வைத்த நகை நிச்சயம் மூன்று மாதங்களில் நமது கைவந்து சேரும்.