சேலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!! முற்றிலும் எரிந்து நாசம்!!

Photo of author

By Sakthi

SALEM:சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.

சேலம்-சங்ககிரி அருகே தனியார்  எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து முழுமையாக எரிந்துள்ளது.தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில்  மோதியதில் அதில் பயணித்தவர்  சம்பவ இடத்திலேயே
உயிரிழந்து இருக்கிறார். அதாவது சங்ககிரி அருகே  சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் , முற்பகல்  நேரத்தில்  தனியார் ஆமினி பேருந்து சென்று கொண்டு இருக்கிறது.

எதிராக வந்த இருசகர வானகம் மீதி எதிர்பாரா விதமாக மோதி உள்ளது.  எதை அறிந்த ஓட்டுனர்  வாகனத்தை கட்டுப்படுத்துவதற்காக  பேருந்தின்  பிரேக்கை  வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது.  மேலும் பேருந்தானது சாலையின் நடுவே விழுந்து உள்ளது. அதிர்ஷ்ட விதமாக பின்னால் வந்த வாகனங்கள் கவிழ்ந்த பேருந்தின் மீது மோதவில்லை.

பேருந்து கவிழ்ந்த உடன் பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பாடு தீப்பிடித்து எரிந்து உள்ளது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக  மீட்கப்பட்டனர். இதனால் சிறு காயங்கள் மூலம் உயிர் தப்பினார்கள்.மேலும் இரு சக்கரத்தில் மோதிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் விபத்து குறித்து சங்ககிரி DSP ராஜ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சங்ககிரி போலீசார் விபத்து பகுதியில்  மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தினால் சங்ககிரி பகுதியில் உள்ள சேலம்- கோவை தேசிய  நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதித்துள்ளது.

இந்த விபத்திற்கு  சாலை விதிகளை முறையாக பின்பற்றாதது தான்  காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாலை விதிகளை முறையாக பின் பற்றுவோம் சாலை விபத்துக்களை தவிர்ப்போம்.