ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை!

0
214
#image_title
ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அதோடு மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 சிக்சர்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. நடந்துள்ள 16 சீசன்களில் 8 முறை 100  சிக்சர்களுக்கு மேல் அடித்த முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
இதற்கு முன்னர் 2013ம் ஆண்டில் 117 சிக்சர்களும், 2015ம் ஆண்டில் 120 சிக்சர்களும், 2017ல் 117 சிக்சர்களும், 2018ல் 107 சிக்சர்களும், 2019ல் 115 சிக்சர்களும், 2020ல் 137 சிக்சர்களும், 2022ல் 100 சிக்சர்களும் இந்த ஆண்டு அதாவது 2023ம் ஆண்டு 125 சிக்சர்களும் அடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 255 சிக்சர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
நாளை அதாவது 24ம் தேதி நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. நாளை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக பெறும் முதல் வெற்றியாகும்.
Previous articleமனிதனின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்! நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!!
Next articleபாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!