பிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி!!! சமூகவலைதளத்தில் வதந்திகளுக்கு தக்க பதில் கொடுத்த பிரபல நடிகர்!!!

0
32
#image_title

பிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி!!! சமூகவலைதளத்தில் வதந்திகளுக்கு தக்க பதில் கொடுத்த பிரபல நடிகர்!!

இந்தி சினிமாவின் மூத்த நடிகரான தர்மேந்திரா அவர்களின் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்தி சினிமாவில் மூத்த நடிகராக இருக்கும் நடிகர் தர்மேந்திரா அவர்களுக்கு 87 வயது ஆகின்றது. இவருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நடிகர் தர்மேந்திரா அவர்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

மேல் சிகிச்சை பெறுவதற்காக நடிகர் தர்மேந்திரா அவர்களின் மகனும் பிரபல நடிகருமான சன்னி தியோல் அவர்கள் கடந்த சொப்டம்பர் 4ம் தேதி அமெரிக்கா அழைத்து சென்றார். அமெரிக்கா மருத்துவமனையில் நடிகர் தர்மேந்திரா அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் தடிகர் தர்மேந்திரா அவர்கள் 20 நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிகின்றது.

இதையடுத்து நடிகர் தர்மேந்திரா அவர்களின் உடல்நிலை குறித்து நேற்று(செப்டம்பர்14) இரவு வதந்திகள் பரவியது. அந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் தர்மேந்திரா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் தர்மேந்திரா அவர்கள் சமூக வலைதளத்தில் “அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையை அனுபவித்து வருவது மகிழ்சியை அளிக்கின்றது. விரைவில் நான் என்னுடைய புதிய படத்துடன் வருவேன்” என்று பதிவிட்டு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் தர்மேந்திரா அவர்கள் பதிவிட்டுள்ளார். நடிகர் தர்மேந்திரா அவர்கள் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.