அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த புதிய தகவல்! உற்சாகத்தில் பெண்கள்!

Photo of author

By Sakthi

தமிழக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறினால் மாற்றுக் கட்சியினர் கூட அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட மகளிரணி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கின்றார்.

இப்பொழுது இங்கே வந்திருக்கின்ற பெண்களை விழிப்புணர்வு படுத்த்தினாலே அதிமுகவை இன்னும் நூறு வருட காலத்திற்கு யாராலும் அசைக்க இயலாது. அதிமுகவில் இனிவரும் காலங்களில் பெண்களுக்கு கூடுதல் மதிப்பு கொடுக்கப்படும். தாய்மார்கள் நினைத்தால், அதிமுகவிற்கு வெற்றி நிச்சயம் இளைஞர்கள் பெண்கள் யாரை ஆக இருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற இயலும். இந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 72 கலை கல்லூரிகள் 24 பாலிடெக்னிக் கல்லூரிகள் 4 பொறியியல் கல்லூரிகள் ஆகியவை ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பல்கலைக்கழகம் தந்த அரசு அதிமுக அரசு. விரைவாக ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்படும் பெண்களுக்கு அதிகமான வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்திலே தான் தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்வரும் தேர்தலில் அவருடைய லட்சிய கனவு நடைபெறும். அதிமுக ஆட்சியில் செய்த பல சாதனைகளை எடுத்து தெரிவித்தால் மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் கூட அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.