அதிமுக கூட்டணியில் அதிர்ச்சி.. விஜய்க்கு மட்டும் தான் முன்னுரிமை!! இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்!!

0
503
A shock in the ADMK alliance.. Vijay is the only priority!! EPS sketch!!
A shock in the ADMK alliance.. Vijay is the only priority!! EPS sketch!!

TVK ADMK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உருவானது முதல் அதிமுக கூட்டணிக்குள் கணக்கீடுகள் மாறிவிட்டன. ஏற்கனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு கடும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் கூட்டணி கட்சிகளான  பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை அதிமுகவுடன் மீண்டும் இணையும் வாய்ப்புகளைப் பற்றிய ஆலோசனைகள் தொடங்கியுள்ளன.

ஆனால் விஜய்யின் வருகையால் ஏற்பட்ட புதிய அரசியல் சூழல் அதிமுகவின் கணக்கை மாற்றி உள்ளது. இளைஞர்கள், நடுத்தர வாக்காளர்கள் ஆகியோரிடையே விஜய்க்கு பெரும் வரவேற்பு கிடைப்பதால், அதிமுக தனது வலுவை நிலைநிறுத்த சில முக்கிய தொகுதிகளை தானே தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்கள் கட்சிக்கான பங்கீடு குறையக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைகள் கடுமையான நிலையை எட்டியுள்ளன. அதிமுக தலைமை, கூட்டணியைப் பேணிக்காக்கும் முயற்சியிலும், தன் கட்சியின் அடிப்படை வலிமையைப் பாதுகாக்கும் பணியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விஜய்யின் அரசியல் நுழைவு, அதிமுக கூட்டணிக்குள் புதிய சலசலப்பையும், அடுத்த தேர்தலுக்கு முன் பெரிய மாற்றங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழக அரசியலில் மீண்டும் ஒருமுறை கூட்டணி கணக்கீடுகள் தலைகீழாகும் சூழலும் உருவாகியுள்ளது.

Previous articleகட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் நான் தான் டாப்பு.. நிரூபித்த செங்கோட்டையன்!! ஈரோடு அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள்!!
Next articleஅந்தர் பல்டி அடுத்த செங்கோட்டையன்.. நேத்து ஒன்னு இன்னைக்கு ஒன்னா!!