பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Kovai: கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.

அப்போது பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்க வைத்தார். பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சிறிது நேரம் கழித்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

அப்போது உடனடியாக தீயணைப்பு துறைக்கு அந்த தகவலை தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த  தீயணைப்பு துறையினர் விரைந்து தீப்பிடித்த பேருந்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீப்பிடித்தற்கான காரணத்தை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வின் காரணமாக அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பேருந்து ஓட்டுனர் செய்த மிக சிறந்த செயலால் பயணிகள் உயிர் பலி தவிர்க்கப்பட்டது. மேலும் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.