தீய சக்தி என்ற வார்த்தையை நாம் கேட்கும் பொழுதே நமக்கு மிகவும் பயங்கரமானதாக இருக்கும். தீய சக்திகள் இருக்கின்றன என்பதில் சிலர் நம்பிக்கையும் வைத்திருப்பர், சிலர் நம்பிக்கை இல்லாமல் இருப்பர். இந்த தீய சக்திகள் என்பது நமது முன்னோர்கள் செய்த பாவங்களாலும், தீய வினைகளாலும் உருவாகக்கூடிய கர்மா தான் தீய சக்திகளாக நம்மை வந்து சேரும். இது அடுத்தடுத்த தலைமுறை என தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வாழ்க்கையானது நன்றாகவே சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென ரத்த காயங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதாவது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது நாம் சரியாகத்தான் செல்வோம், ஆனால் எதிரில் வருபவராலோ அல்லது திடீரென ஏதேனும் ஒரு பிரச்சினையினாலோ நாம் கீழே விழுந்து ரத்த காயங்கள் ஏற்படுவதற்கான காரணம் உள்ளடக்கமாக இந்த தீய சக்திகள் நமது குடும்பத்தில் இருப்பது தான்.
இந்த தீய சக்திகள் என்பது நமது கண்களுக்கு தெரியாது. இந்த தீய சக்திகளை மூன்று வகைகளாக பார்க்கலாம். அதாவது பில்லி, சூனியம், ஏவல் இது போன்ற வடிவங்களில் நம்மிடம் வரும். கண் திருஷ்டி என்ற வடிவத்திலும் இந்த தீய சக்திகள் நம்மிடம் வருகின்றன. இதில் பாதிக்கப்படாதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டது தான் இருப்போம்.
அதேபோன்று திருஷ்டி சுற்றி முச்சந்தியிலோ அல்லது வீட்டிற்கு முன்பாகவோ போட்டு இருப்பார்கள், அதனை நாம் தெரியாமல் மிதித்து விட்டாலும் தீய சக்திகள் நம்மிடம் வந்து விடும். இவ்வாறு தீய சக்திகள் நம்மை பாதிக்கப்பட்டு இருந்தால் இரவில் தூக்கம் இருக்காது, யாரோ ஒருவர் நம்மை அமுக்குவது போன்று தோன்றும், முகமானது கலை இழந்து காணப்படும்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தாலோ அல்லது இருப்பது போல சந்தேகங்கள் இருந்தாலோ ஒரு எளிய பரிகாரத்தை செய்து கொள்வது நல்லது. இதற்கான பரிகாரம் செய்வதில் இரண்டு முறைகள் உள்ளன. அவை யாகம் மற்றும் தூபம் போடுவது ஆகும்.
யாகம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து புதிய மண்சட்டி ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மண் சட்டியில் முதலில் கற்பூரத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சமத்துக் குச்சி என்பதனை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். சடா மஞ்சள் என்பதை 100 கிராம் அளவிற்கும், மருதாணி விதைகளை 100 கிராம் அளவிற்கும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த கற்பூரத்திற்கு மேல் சமத்து குச்சிகளை நிரப்பிக் கொண்டு, குச்சிகளுக்கு மேல் ஜடா மஞ்சளை போட்டு, மருதாணி விதைகளையும் போட்டு அந்த கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும். அதில் இருந்து வரக்கூடிய புகை நம்மிடம் உள்ள தீய சக்திகளையும், துர் சக்திகளையும் விலக்கிவிடும். இதனை குடும்பத்துடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை நாட்களில் செய்வது சிறப்பு.
தூபம் போடுவதற்கு வெள்ளைக் குங்கிலியம் மற்றும் வில்வம் பவுடரை சேர்த்து தூபம் போட்டால் தீய சக்திகள் அனைத்தும் விலகும். இந்த தூபத்தினை நமது வீடு முழுவதும் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் காட்டிக் கொள்ளலாம். இதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் நமது வீட்டிலும், நம்மிடமும் உள்ள தீய சக்திகளை விரட்டி அடிக்கும்.