தூத்துக்குடியில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்! 1500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தகவல்! 

Photo of author

By Sakthi

தூத்துக்குடியில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்! 1500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கப்பூர் நாட்டின் பிரபல நிறுவனமான செம்கார்ப் நிறுவனம் புதிய தொழிற்சாலையை தொடங்கவுள்ளதாகவும் இதனால் 1500 வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் கலந்து கண்டனர்.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு 5.5 லட்சம் கோடி முதலீடுகளை பெற வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல் நாளிலேயே 5.5 லட்சம் கோடி முதலீடுகள் கிடைத்தது.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் நிறுவனமும் கலந்து கொண்டது. இந்நிறுவனம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க 36238 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக கூறியது. மேலும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்நிலையில் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை செம்கார்ப் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைப்பதால் 1500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதற்காக செம்கார்ப் நிறுவனம் சொஜிட் கார்ப் நிறுவனத்துடனும், கெயூசு எலக்ட்ரிக் பவர் நிறுவனத்துடனும் இணைந்து பணியை தொடங்கவுள்ளது.