8500 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனா!!? விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது!!!
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் 8499 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட புதிய ரியல்மி சி51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நேற்று(செப்டம்பர்11) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரியல்மி சி51 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்…
ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் எல்.இ.டி பிளாஷ் லைட்டுடன் இரண்டு கேமரா செட்டப் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 50 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவும் அத்துடன் 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹெச்.டி.ஆர் கேமரா ஆகும். ரியல்மி சி51 ஸ்மார்ட் போனால் உள்ள பிரைமரி கேமராவில் ஸ்லோ மோசன், டைம் லேப்ஸ், போர்ட்ரைட் மோட், பனாரோமிக் வியூவ், நைட் மோட் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்பி எடுக்க 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்பி கேமராவில் பியூட்டி மோட், பொக்கே எபெக்ட் ஆகிய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி51 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட் 13 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆக்டோ கோர் யுனாசொக் டி612 12 என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மாலி-ஜி57 ஜிபியு கொண்ட கிராபிக்ஸ் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. ரியல் மி மாடல்களில் வரும் ரியல் மி யூஐ டி எடிசன் ஓஎஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ரியல் மி சி51 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வருகின்றது. இந்த டிஸ்பிளேவில் 90ஹெச்.ஜெட் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. அந்த வசதிகளுடன் சேர்த்து 560 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதியும் 180 ஹெச்.ஜெட் டச் சாம்ப்ளிங் ரேட் வசதியும் வழங்கப்படுகின்றது.
ரியல் மி சி51 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விரிச்சுவல் ரேம் வசதியுடன் உள்ளது. மேலும் 64 ஜிபி ரோம் மெமரி உள்ளது. ஆக 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் கொண்ட ரியல் மி சி51 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் 2 டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் கொடுக்கப்படுகின்றது.
ரியல் மி சி51 ஸ்மார்ட் போனில் 5000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரியும் 33 வாட்ஸ் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகின்றது. இந்த ரியல் மி ச51 ஸ்மார்ட்போனில் சைடு மவுன்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3.5 மி.மீட்டர் ஆடியோ ஜேக், பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிங் வசதிக்காக புளூடுத் 5.0, வைபை 802 ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல் மி சி51 ஸ்மார்ட்போனில் மினி கேப்சியூல் நோட்டிபிகேசன் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மினி கேப்சியூல் அம்சம் ஆப்பிள் ஐ-போன்களில் இருக்கும் டைனமிக் ஐலேண்ட் வசதி போலவே இருக்கின்றது.
ரியல் மி சி51 ஸ்மார்போனின் பின்பக்கம் உள்ள பேனல் ஸ்டைலிஸ் கிளட்டரிங் டிசைனாக உருவாக்கப்பட்டுள்ளது. ரியல் மி சி51 ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், மினட் கிரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது. 8ஜிபி (4ஜிபி ரேம்+ 4ஜிபி விரிச்சுவல் ரேம்)+ 64 ஜிபி ரோம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை 8999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 4ம் தேதி ரியல் மி சி51 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஙெய்யப்பட்டது. இதையடுத்து நேற்று(செப்டம்பர்11) முதல் ரியல் மி சி51 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரியல்மி நிறுவனத்தின் தளத்திலும், பிளிப்கார்ட் தளத்திலும் ரியல் மி சி51 ஸ்மார்ட்போன் விற்பனை நடந்து வருகின்றது. ஐசிஐசிஐ, ஹெச்.டி.எப்.சி வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 500 ரூபாய் தள்ளுபடியுடன் 8499 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்.