இனி இத்தனை நாட்களுக்கு தான் பள்ளி செயல்படும்!! விடுமுறை குறித்து மாஸ் அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

அதிகப்படியான வெப்பம் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவற்றின் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் சற்று தாமதமாக திறக்கப்பட்டது. அதாவது வழக்கமாக ஜூன் மாதம் ஒன்றாம் நாள் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வந்த நிலையில் 2024 – 2025 ஆம் வருடத்திற்கான கல்வியாண்டு ஜூன் மாதம் பத்தாம் நாள் முதல் வேலை நாளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த தாமதத்தினை சரி செய்யும் விதமாகவே இந்த கல்வியாண்டிற்கான வேலைநாள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. எனவே சனிக்கிழமைகளிலும் கூட பள்ளிகள் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட வேலை நாட்களை 210 ஆகக் குறைத்து வழக்கம் போல் வேலைநாட்களில் இருந்து வார இறுதி தினங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பலராலும் விரும்பப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தக் கல்வியாண்டில் குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் செயல்படுவதாக  வெளிவந்த தமிழ்நாடு பள்ளிகல்வித்துறையின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகமானது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும் பிற அரசு ஊழியர்களைப் போல எல்லா சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியது.

அக்கடிதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பதற்கான உத்தரவினை வெளியிட கால தாமதம் ஏற்படுமாயின்  உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை  அளிப்பதற்கான அறிவிப்பை மட்டுமாவது கூடிய விரைவில் வெளியிடுமாறு வேண்டியுள்ளனர்.

இதனை ஏற்கும் பொருட்டு பள்ளி வேலைநாட்கள் குறித்த திருத்தப்பட்ட அரசாணை பள்ளிகல்வித்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி விரைவில் வெளியிடப்படும்.