தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!!

Photo of author

By Sakthi

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படப் போகிறது என்று தகவல்கள் வந்துள்ளது. அமைச்சரவையில் புது அமைச்சர்களின் பட்டியலில் ஒரு சில பேரின் பெயர்கள் இருக்கின்றது.

அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே மன்னார்குடி தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டி.ஆர்.பி ராஜா அவர்களின் பெயரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மருத்தவும் பார்த்தவரான எழிலன் அவருடைய பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. இவர்கள் இரண்டு பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா அல்லது மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி இருவர்களில் ஒருவருக்கு என மொத்தம் மூன்று பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சரவையில் இவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது மட்டுமில்லாமல் அமைச்சரவையில் 7க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் பதவிக்கான இலாகாக்கள் மாற்றப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.