அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை வேட்டையாடும் காவல்துறையினர்! அடுத்து கைதாகும் முன்னாள் அமைச்சர் இவர்தானா?

0
123

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்பிரசாத் இவருடைய மனைவி மார்க்ரெட் ஜெனிஃபர் இவர் நர்சிங் படித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில், தனக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து ரூபாய் 4 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜெனிஃபர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவின் நிர்வாகிகளான கிருஷ்ண சமுதாயத்தைச் சார்ந்த லாசர், தேனீர் பட்டியை சேர்ந்த வீரமலை சூரியூரை சார்ந்த சுப்பிரமணி உள்ளிட்டோர் மீது சில மாதங்களுக்கு முன்னர் துவாக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள்.

இவர்களில் லாசர் மட்டும் கைது செய்யப்பட்டார் இந்த சூழ்நிலையில், ஜெனிஃபர் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனுவை வழங்கினார். அது தொடர்பாக ஜெனிபர் தெரிவித்ததாவது ,லாசர் உள்ளிட்ட 3 பேரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை என்னிடம் காட்டித்தான் பணம் கேட்டார்கள். எனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு லாசர், வீரமலை, சுப்பிரமணி, உள்ளிட்டோர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் வாங்கிட்டு சென்றார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதைக் கொடுத்து அனுப்பியவுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தற்காலிகமாக வேலை வாங்கித் தந்து ஏமாற்றி விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய லாசர் வீரமலை, சுப்பிரமணி மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தும், புதிய விசாரணை அதிகாரியை நியமனம் செய்து என்னுடைய வீட்டின் பத்திரத்தை வைத்து நான் வழங்கிய 4 லட்சத்தையும் மீட்டுத்தருமாறு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே இருக்கின்ற மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஐஜி பாலகிருஷ்ணனிடம் இன்று காலை தன்னுடைய கைக்குழந்தையுடன் மற்றும் கணவர் உள்ளிட்டோருடன் புகார் மனுவை வழங்கியிருக்கிறார்.

இந்த மனு தொடர்பான விசாரணையை நடத்த திருச்சி மாவட்ட காவல் துறையினருக்கு ஐ ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் முறைகேடு புகாரில் சிக்கி தற்போது சிறையில் உள்ளார், அடுத்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவாரா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

Previous articleபொங்கல் பரிசு தொகுப்பு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்! அதிரடியாக பதில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!
Next article12-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!