பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்!

Photo of author

By Hasini

பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்!

உலகில் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்பவர் பில் கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் திறமைமிக்க இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ். இவருக்கு உலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த மனிதராக இவரை கொண்டாடுகிறார்கள். மெலிண்டா பில் கேட்ஸ் உடனான அவருடைய 27 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக திடீரென்று கடந்த மே மாதம் 3ஆம் தேதி அறிவித்தார்.

அவருடைய 125 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை குறைந்த வரியில் பிரித்துக் கொள்வதற்காகத்தான் அவ்வாறு விவாகரத்து செய்து கொள்கிறார் என பல யூகங்கள் அனைவரிடத்திலும் பேசப்பட்டன. இந்நிலையில் பில்கேட்ஸ் 2008ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகினார். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் இயக்குனர் பதவியிலிருந்து விலகினார்.

இதனிடையே இதற்கு காரணம் பெண் ஊழியர் ஒருவருக்கு அவர் தகாத முறையில் இமெயில்  அனுப்பியதாகவும், அதற்கு 2008 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டித்ததாகவும் அமெரிக்காவிலிருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழு நேர பெண் ஊழியர் ஒருவருக்கு பில்கேட்ஸ் தகாத முறையில் மின்னஞ்சல் அனுப்பியது கண்டறியப்பட்டது.

பில்கேட்ஸ் மைக்ரோ சாப்டின் முழு நேரமாக பணியாற்றிய அந்த பெண் ஊழியரை அலுவலகத்திற்கு வெளியே வந்து தன்னை சந்திக்கச் சொன்னதாக அந்த இமெயிலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பெண்ணுடன் அவருக்கு ஏற்கனவே 20 ஆண்டுகளாக உறவு இருப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இமெயில் விவகாரம் தெரிய வந்ததை அடுத்து மைக்ரோசாஃப்ட் இயக்குனர்கள் குழுவில் இதனை கைவிடுமாறு அப்போதே எச்சரித்ததாகவும் ஒரு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் இதனை ஒப்புக்கொண்டு இனி இப்படி நடக்காது என மன்னிப்பு கோரியதாகவும் அந்த செய்தி தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு மைக்ரோசாப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது அந்த செய்தி உண்மை தான் இதைப் பற்றி மேற்கொண்டு தெரிவிக்க எதுவும் இல்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளார். தொழிலில் சக்கரவர்த்தி, கொடையாளராகவும்  திகழ்பவர் பில் பில்கேட்ஸ்.

கேட்ஸ் மெலிண்டா என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக பணிகளையும், செய்து சமூகத்தில் கௌரவம் மிக்க மனிதராக வலம் வருகிறார். ஆனால் அவருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் இருக்கிறது. இதனிடையே அவரின் மதிப்பு சரிய முழு காரணமாகவும், அந்த பெண்  இருக்கலாம் என அந்த நிறுவனத்தினால் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது. எல்லா ஆண்களுமே சமுதாயத்திற்கு எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் குடும்ப வாழ்கையில் பின் தங்கியே உள்ளனர்.